1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 8 ஜூன் 2016 (15:23 IST)

ரூ.4.87 கோடி பதுக்கல் வழக்கில் அன்புநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்

ரூ. 4 கோடியே 77 லட்சம் பணத்தை பதுக்கி வைத்திருந்தது தொடர்பான வழக்கில், அதிமுக பிரமுகர் அன்புநாதன் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் மனு பெற்றுக்கொண்டார்.
 

 
கரூர் மாவட்டம், அதிமுக பிரமுகரான நிதி நிறுவன அதிபர் அன்புநாதன் வீட்டில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அங்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனர்.
 
அப்போது, 4 கோடியே 87 லட்சத்து 33 ஆயிரம் ரொக்கம், 11 பணம் எண்ணும் இயந்திரங்கள், கள்ள நோட்டு கண்டுபிடிக்கும் இயந்திரம், வாக்காளர் பட்டியல் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
 
இதுதொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
 
மேலும், தினமும் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், அவர் கீழ் நீதிமன்றத்தில் 2 வாரத்திற்குள் ஆஜராகி முன்ஜாமீனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டு இருந்தது.
 
அதன்படி, அன்புநாதன் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜாராகி ஆஜராகி ஜாமின் மனுவை பெற்றுக்கொண்டார்.