திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2023 (07:50 IST)

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம்:- அன்புமணி ராமதாஸ்

Anbumani
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் தான் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 சின்னாளபட்டியில் நடைபெற்ற பாமக 2.0 என்ற பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி நேற்று பேசினார். அதில் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மதுபான கூடம் என்றால் அது சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் தான் என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா அவர்களுடைய கொள்கை பூரண ,மதுவிலக்கு என்றும் ஆனால் இன்று திமுக ஆட்சி அதனை செயல்படுத்துகிறதா என்றும் கேள்வி அனுப்பினார். 
 
சமீபத்தில் விளையாட்டு மைதானம் உள்பட பல பகுதிகளில் மதுபானங்கள் பரிமாற அனுமதி என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை கடுமையான எதிர்க்கும் அரசியல்வாதிகளில் ஒருவர் அன்புமணி என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva