ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2023 (15:10 IST)

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நயன்தாரா பட ஷூட்டிங்!

நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை. ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இப்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஒய்நாட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் சித்தார்த் மற்றும் மாதவன் ஆகியோருடன் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்துக்கு டெஸ்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது சென்னையில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதைக்களம் என்பதால் விரைவில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த பட ஷூட்டிங் நடக்க உள்ளதாம்.