தொடர்புடைய செய்திகள்
- நீதிக்கு நீதி வேண்டும் என்று மத்திய அமைச்சரை கேட்கும் கமல்ஹாசன்
- காவிரி மேம்பாட்டு ஆணையம் சாத்தியமில்லை; நீர்வளத்துறை அமைச்சர் தடாலடி
- கேரள அரசின் வஞ்சக எண்ணம் நியாயமற்றது - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
- என்னடா இது அதிசயமா இருக்கு.....ஸ்டாலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எடப்பாடி
- தமிழக உரிமையை யாரிடமிருந்து பெறப்போகிறார் தமிழிசை?
6 வாரம் தேவையில்லை, 6 மணி நேரம் போதும்: அன்புமணி குறிப்பிடுவது எதை?
மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை ஆறு வாரங்களில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், ஆறுவார கால அவகாசம் போதாது இன்னும் சில வாரங்கள் தேவை என மத்திய அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், 'மத்திய அரசு நினைத்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 6 மணி நேரம் போதும். ஒரே ஒரு அரசாணை வெளியிட்டால் போதும். ஆனால் மத்திய அரசு கால அவகாசம் கேட்பது தவறு
காவிரி என்பது விவசாயிகள் பிரச்சனை என்பது மட்டுமல்ல. தமிழ்நாட்டின் உயிர்நாடியே அதுதான். இந்த ஆற்றை நம்பித்தான் 19 மாவட்ட மக்கள் உள்ளனர். அவர்களை குடிநீர் பிரச்சனை காவிரியால் தான் தீரும். சென்னை உள்பட ஆறு மாநகராட்சிகளுக்கு காவிரி தண்ணீர் தான் கைகொடுத்து வருகிறது. 40 லட்சம் விவசாயிகள் காவிரியை நம்பித்தான் உள்ளனர். உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் இதற்கு மேல் நாம் எங்கு போவது? என்று அன்புமணி ஆவேசமாக கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
