வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (13:36 IST)

வெற்றுப் பத்திரத்தில் கூட கையெழுத்து போட தயாராக இருந்தோம்: அன்புமணி ராமதாஸ்

நாங்கள் கூட்டணியில் இணைகிறோம், எங்களுக்கு தொகுதிகள் கூட வேண்டாம், எங்களது மக்களுக்கு இட ஒதுக்கீடுமட்டும் கொடுங்கள் போதும், அதற்காக நாங்கள் வெற்று பாத்திரத்தில் கூட கையெழுத்து போட தயாராக இருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 
 
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தர்மபுரியில் அவரது மனைவி சௌமியா அன்புமணிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
எடப்பாடி பழனிசாமி நம்மைப் பார்த்து துரோகி என்கிறார். யார் துரோகி என்பது உங்களுக்கே தெரியும். அவரை வழிநடத்திய அனைவருக்கும் துரோகம் செய்துதான் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். பாமகவின் தயவால் 2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். 
 
கடந்த தேர்தலில் கொடுக்கும் தொகுதியை ஏற்றுக்கொண்டால் 10.5% இடஒதுக்கீடு கொடுப்பதாக கூறினர். எங்களுக்கு தொகுதிகளே வேண்டாம், இடஒதுக்கீடு கொடுங்கள். வெற்றுப் பத்திரத்தில் கூட கையெழுத்து போட்டு தருகிறோம் என ராமதாஸ் கூறினார்’ என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
 
Edited by Siva