ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (18:57 IST)

இந்த தேர்தல் விவசாயிக்கும் முதலாளிக்கும் நடக்கும் போட்டி: அன்புமணி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதும் அந்த 23 தொகுதிகளிலும் பாமக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று தீவிரமாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு விவசாயி என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஒரு முதலாளி என்றும் இந்த தேர்தல் விவசாயிக்கும் முதலாளிக்கும் இடையே நடக்கும் போட்டியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்
 
மேலும் கடந்த 10 ஆண்டு காலமாக எந்த பிரச்சனையும் இன்றி தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது என்றும் திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அராஜகம் தொடரும் என்றும் எனவே அதிமுக கூட்டணியை ஆதரித்து வாக்களியுங்கள் என்றும் பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்