செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (18:07 IST)

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு.. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இரங்கல்..!

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 
ராமதாஸ்: இந்தியாவில் வேளாண் வளர்ச்சிக்கும், உணவுப் பாதுகாப்புக்கும் ஈடு இணையற்ற பங்களிப்பு  செய்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
 
 ஒருபுறம் வேளாண்மையில்  தொழில்நுட்பங்களை புகுத்திய அவர்,  இன்னொருபுறம் உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து அவர்களின் வாழ்வாதாரம் உயரவும் வழிவகுத்தார்.  
 
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அறிவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அன்புமணி ராமதாஸ்: பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் வேளாண் ஆராய்ச்சியாளர் எம் எஸ் சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார் என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். 
 
உணவுக்காக வெளிநாடுகளில் இருந்து உணவு தானிய இறக்குமதியை நம்பியிருந்த இந்தியா‌, இன்று உலகில் உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக வளர்ந்திருப்பதற்கு மிக முக்கிய காரணம்  எம் எஸ் சுவாமிநாதன் தலைமையேற்று நடத்திய பசுமை புரட்சி தான். பல்வேறு  ஆராய்ச்சி அமைப்புகளுக்கு தலைமையை ஏற்று இந்தியாவின்  உணவு பாதுகாப்பை உறுதி  செய்தவர். 
 
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் , வேளாண் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 
Edited by Mahendran