விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
பிரபல இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று காலமானார்.
இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் எம்.எஸ்.சுவாமி நாதன். இவர் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். நாட்டில், பஞ்சம் போன்ற காலங்களில் விவசாயிகள் மற்றும் அரசின் கொள்கைகளுடன் இணைந்து பிற விஞ்ஞானிகள் உதவியுடன் பசுமை புரட்சியை ஏற்படுத்தினார்.
அத்துடன், சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக பணியாறினார். இந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள தன் இல்லத்தில் வயது முதிர்வால் காலை 11:20 மணியளவில் காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.