புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (19:29 IST)

ஆறாம் வகுப்பு பாடத்தில் ரம்மி..! – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழக பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு பாடத்தில் ரம்மி குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாடநூல் கழகத்தின் ஆறாம் வகுப்பு கணிதப் புத்தகத்தில் ”முழுக்கள்” குறித்த பாடத்தில் ரம்மி குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது சமீபமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழக மாநில பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்பு கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தில் சீட்டுக்கட்டுகளைக் கொண்டு ரம்மி ஆட்டத்தை எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து விளக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மாணவர்களை சீரழித்து விடும்.

ரம்மியை ஊக்குவிக்கும் முழுக்கள் பாடத்தை மாற்றியமைப்பதோடு மட்டுமல்லாமல், சீட்டுக்கட்டுகளுடன் கூடிய அந்த பாடம் மாணவர்களின் கண்களில் படக்கூடாது. அதற்காக இப்போது வரும் கல்வியாண்டுக்கு அந்த பாடம் இல்லாத புதிய பாடநூல்களை அச்சிட்டு வழங்க அரசு முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.