1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. supreme court judgement today about demonetization case

பணமதிப்புக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு

demonetization
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது என்பதும் இதன் காரணமாக 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் புதிதாக 500 ரூபாய் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் அவதி அடைந்தனர் என்றும் பொருளாதாரம் சரிந்தது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 
 
இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பில் என்ன இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
226வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?