திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (11:12 IST)

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி கைது..

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முரளி போலீஸாரால் கைது.

சமீபத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் கிளையில், ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைப்போனது. இச்சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து திருவாரூரில் மணிகண்டன் என்பவரை போலீஸார் 5 கிலோ நகைகளுடன் கைது செய்தனர். அவருடன் சேர்ந்து திருடிய சீராத்தோப்பு சுரேஷ் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்துக்கு தலைவனாக செயல்பட்டது முருகன் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே கொள்ளையடித்தவர்கள் மோட்டார் பைக்கில் தப்பிச் செல்லும் காட்சிகளை போலீஸார் நேற்று வெளியிட்டனர். அந்த பைக் எண் ஆகியவற்றின் அடிப்படையில் தப்பி ஓடிய திருடர்களை தேடி வந்தனர்.

இதனையடுத்து போலீஸார் தேடி வந்த சுரேஷ் என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் சுரேஷின் தாய் கனகவல்லியையும் போலீஸார் சிறையில் அடைத்துள்ள நிலையில், தற்போது இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முருகனின் அண்ணன் மகன் முரளி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.