செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (08:32 IST)

புதுவிதமான ஏடிஎம் மோசடி! என்னமா யோசிக்கிறாங்க?

ஏடிஎம் கொள்ளையர்கள் விதவிதமாக யோசித்து கொள்ளையடித்து வருவதால் வங்கி அதிகாரிகளும், காவல்துறையினர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
 
சென்னையில் உள்ள ஏடிஎம் எந்திரத்திற்கு செல்லும் மின்சாரத்தைத் துண்டித்து, புதுவிதமான முறையில் பணம் கொள்ளை அடித்த வடமாநில இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
சென்னை அமைந்தகரை ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற 2 வடமாநில இளைஞர்கள், பரிவர்த்தனை நடைமுறைகள் முடிந்து கணக்கில் பணம் எடுக்கப்பட்டுவிட்டதாக செய்தி வந்தபின் இயந்திரக் கோளாறால் பணம் வரவில்லை என்று வங்கிக்கு தகவல் அனுப்பியுள்ளனர். வங்கியும் அதனை சோதனை செய்து வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டதை அறிந்து பின்னர் பணம் திரும்ப அவர்களது கணக்கில் வரவு வைத்துள்ளன்ர.
 
ஆனால் வங்கித் தரப்பில் சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது, 2 இளைஞர்களில் ஒருவன் எந்திரத்தின் பின்பக்கம் செல்வதும் மற்றொருவன் எந்திரத்தில் இருந்து பணம் எடுப்பதும் தெரியவந்தது. இதுகுறித்த விசாரணையில் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் வெளியே வரும் நொடியில் மின் இணைப்பை துண்டித்து, அதன் மூலம் எடுக்கப்பட்ட பணம் குறித்த தகவல் வங்கிக்கு செல்லாதவாறு செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
 
கைது செய்யப்பட்ட இருவரும் ஹரியானாவைச் சேர்ந்த ஜாகீர், அப்சல் என்பது தெரிய வந்துள்ளது