வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (14:02 IST)

தாத்தாவின் தகாத உறவு: பாட்டிக்கு ஏற்பட்ட விபரீதம்!!!

சேலம் மாவட்டத்தில் முதியவர் ஒருவரின் தகாத உறவு காரணமாக அவரது மனைவி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாலிகடை கிராமத்தை சேர்ந்த சின்னபையன்(65). இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்தார். சின்னபையனுக்கு தன் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பச்சியம்மாள்(60) என்ற பாட்டியுடன் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது.
 
இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததை சின்னபையனின் மனைவி லட்சுமி நேரில் பார்த்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி, இதுகுறித்து பஞ்சாயத்தில் முறையிடப்போவதாக கூறினார்.
 
இதனால் பதறிப்போன கள்ளக்காதல் ஜோடி, லட்சுமியை கொலை செய்தனர். பின்னர் கொள்ளை நாடத்தை அரங்கேற்ற முடிவு செய்து லட்சுமியின் கழுத்தில் இருந்த நகையை கொள்ளையடித்துவிட்டு, நகைக்காக லட்சுமியை மர்ம நபர்கள் கொலை செய்ததாக ஊர் மக்களை நம்ப வைத்தனர்.
 
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், சின்னபையனின் நடவடிக்கையில் சந்தேகித்த போலீஸார், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது. இதையடுத்து போலீஸார் சின்னபையனையும் பச்சியம்மாளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.