பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி - முதல்வர் ஸ்டாலின்
உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று அவர் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்கள் தொடர்ந்து வருத்தமளிக்கிறது.
அதனால், பேனர் கலாச்சரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனது கேண்டுகோளை திமுகவினர் கட்டளையாக ஏற்றுச் செயல்பட வேண்டும் . பேனர் கலாச்சாரத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது, மின்சாரம் தாக்கிச் சிறுவன் உயிரிழந்தது எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 13 வயதே ஆன தினேஷை இழ்ந்து வாடும் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. இனி பொதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம ஆண்டு, செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி பணியை முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து கந்தன்சாவடியில் உள்ள தன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் சுபஸ்ரீ. அப்போது, பள்ளிக்கரணை பகுதியில் முன்னாள் கவுன்சிலர் ஒருவர், நடுரோட்டில் வைத்திருந்த போஸ்டர் காற்றில் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்து. இதில் நிலைதடுமாறி அவர் சாலையில் விழுந்தார். பின்னால் வந்த டேங்கர் லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இந்த சம்பவத்தில் 22 வயது சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.