1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (15:10 IST)

8 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

சென்னை முகப்பேரில் ஆட்டோ டிரைவர் ஒருவன் 8 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த குற்றத்தை தடுக்க அரசு முயற்சி செய்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாத சில ஜென்மங்கள் தொடர்ந்து தங்களது பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
 
சென்னை முகப்பேரில் பாடிபுதுநகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (33) என்ற ஆட்டோ டிரைவர் மாணவியின் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டி பலமுறை கற்பழித்துள்ளான். இதனால் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் தெரிவிக்கவில்லை.
 
சமீபத்தில் மாணவிக்கு வயிற்று வலி ஏற்படவே, அவரின் தாயார் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
 
இதனால் பேரதிர்ச்சிக்கு ஆளாக அவரது தாயார், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் அந்த அயோக்கியன் நாகராஜை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.