ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (11:09 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலையில் காவல் உதவி ஆய்வாளர் மகன் பிரதீப் செய்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உடந்தையாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் மகன் குறித்து வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை தொடர்ச்சியாக நோட்டமிட்டு கொலை கும்பலை ஏரியாவிற்குள் வர வைத்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப் என்பவரை சில நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். பிரதீப் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்ததும், இவரது தந்தை திருநாவுக்கரசு சென்னை ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக இருப்பதும் தெரியவந்தது. ஆற்காடு சுரேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டபோது அவரது இறுதி சடங்கு முழுவதும் பிரதீப் இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிரதீப் ஆம்ஸ்ட்ராங்கின் நடமாட்டத்தை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது கொலைகாரர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும், குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் புதிதாக கட்டி வரும் பெரம்பூரில் உள்ள வீட்டை அவர் எப்போது பார்க்க வருவார், எந்த இடத்தில் நின்று பார்ப்பார்,  அவருடன் யார் யார் வருவார்கள்,  ஆயுதங்களை கையில் வைத்திருப்பாரா போன்ற தகவல்களை கொலைகாரர்களிடம் பகிர்ந்துள்ளதாக தெரிகிறது.

பிரதீப் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

Edited by Mahendran