ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் விசாரணை
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த சில வாரங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த படுகொலை சம்பந்தமான பலரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் விசாரணை செய்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து பல பிரபலங்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணையில் திமுக, அதிமுக உள்பட பல முன்னணி கட்சிகளின் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளை பார்த்தோம்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடி சம்போ செந்தில் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு நெல்சன் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் அடுத்த கட்டமாக இயக்குனர் நெல்சன் இடமும் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்களியாகி உள்ளன. இந்த தகவல் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran