1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 மே 2020 (13:15 IST)

இரு மடங்காக உயர்கிறது ஆம்னி பேருந்து பயண கட்டணம்: பயணிகள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் வேலை இன்றி வருமானமின்றி உள்ளனர் என்பதும் இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் மிக அதிகமாக உயர்ந்து விட்டதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிக்கலில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. விலைவாசியை அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
இந்த நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக ஆம்னி பேருந்துகளில் பயண கட்டணம் இரு மடங்காக உயர்கிறது என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அப்சல் என்பவர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அரசு பேருந்துகளின் கட்டணத்தை விட ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் இரு மடங்காக இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் இரு மடங்கு கட்டணம் உயர்கிறது என்ற தகவல் பயணிகள் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
ஒரு கிலோமீட்டருக்கு 1.60 ரூபாய் கட்டணம் என இருந்த நிலையில் தற்போது 3.20 ரூபாய் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அப்சல் அவர்கள் தெரிவித்துள்ளார். ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும் போது இந்த புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளதால் இனி ஆம்னி பேருந்தில் பயணம் செய்பவர்கள் பெரும் கட்டணத்தை தங்கள் பயணத்திற்காக கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது