1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஆகஸ்ட் 2020 (11:49 IST)

சென்னை ராணுவ வெடிபொருள் கிடங்கிற்கு மாற்றப்படும் அம்மோனியம் நைட்ரேட்!

சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை ராணுவ கிடங்கிற்கு மாற்ற திட்டம் என தகவல். 
 
பெய்ரூட் அம்மோனியம் நைட்ரேட் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் குறித்து கேள்வி எழுந்தது. மணலியில் உள்ள கிடங்கில் அவை பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள கிடங்கிலிருந்து 2 கி.மீ தொலைவுக்கு மக்கள் வாழும் பகுதி இல்லை என சுங்கத்துறை தெரிவித்திருந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவல்களில் 700 மீட்டர் தொலைவிலேயே குடியிருப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கிடங்கில் 37 கண்டெய்னர்களில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை இடம் மாற்றும் வரை பலத்த பாதுகாப்பு அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. 
 
இந்நிலையில், சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை குடியிருப்புகள் இல்லாத ராணுவத்துக்கு சொந்தமான வெடிப்பொருள் பாதுகாப்பு கிடங்கிற்கு மாற்ற திடமிட்டிருப்பதாக காவல் ஆணையர், வெடிபொருள் பாதுகாப்பு அதிகாரிகள், சுங்கத்துறை இணை ஆணையர் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.