சென்னையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது அமோனியம் நைட்ரேட்: பொதுமக்கள் நிம்மதி!
சென்னையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது அமோனியம் நைட்ரேட்
சென்னை குடோனில் வைக்கப்பட்டிருந்த 740 டன் அமோனியம் நைட்ரேட் இரண்டாம் கட்டமாக அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது
சென்னையில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் இருந்ததை அடுத்து அந்த அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சமீபத்தில் சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டது. இதனை அடுத்து முதல் கட்டமாக ஏற்கனவே கண்டெய்னர்களில் அமோனியம் நைட்ரேட் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாகவும் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது
சென்னையில் இருந்து 740 டன் அமோனியம் நைட்ரேட்டை இரண்டாம் கட்டமாக 12 கண்டெய்னர் லாரிகள் மூலம் ஐதராபாத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் சாலை மார்க்கமாக இந்த அமோனியம் நைட்ரேட் எடுத்துச் செல்லப்படுவதால் கண்டெய்னர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த குடோன் ஒன்றில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து சென்னையில் இருக்கும் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது