திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 மார்ச் 2021 (07:52 IST)

உறுதியாகிறது தேமுதிக-அமமுக கூட்டணி: விஜயகாந்த் இன்று முக்கிய அறிவிப்பு!

வரும் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
ஆனால் அதே நேரத்தில் 200 தொகுதிகளுக்கும் அதிகமாக அமமுக ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில் தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட உடன் அதில் சில வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
நேற்று அமமுக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த உடன்பாட்டின்படி 70 தொகுதிகள் வரை தேமுதிகவுக்கு அமமுக ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தேர்தல் அரசியல் சூடு பிடித்துள்ளது