1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 மார்ச் 2021 (22:10 IST)

அமமுக தேர்தல் அறிக்கை :வெளீயீடு! வீட்டில் ஒருவருக்கு அரசுவேலை -

அமமுக கட்சியில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின்  பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என  சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமமுகவுடன் சில முக்கிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.  அவர்  கோவில்பட்டி தொகுதியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார். இத்தொகுதியில் ஐம்முனைப் போட்டி நிலவுகிறது.

தினகரன் தலைமையிலான அமமுக கட்சியில் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 195 தொகுதிகளில் அமமுக போட்டியிடவுள்ளது. இதனால் தேமுதிகவின் நிலைமை பரிதாபத்தில் உள்ளது.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தமது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் இனிமேல் மதுபான ஆலைக்கு அனுமதி கிடையாது எனவும், தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு அரசுவேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.