புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (09:36 IST)

தமிழகத்தில் அம்மா ‘வை ஃபை’யை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் ஐந்து முக்கிய நகரங்களில் அம்மா இலவச ‘வை ஃபை’ சேவையை  நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைத்தார். 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது  தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் இலவச ‘வை ஃபை’ வழங்கப்படும் என்றார்.
இத்திட்டத்தை அமுல்படுத்த கடந்த 2017 ஆகஸ்ட் 16-ம் தேதி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ரூ. 8 கோடியே 50 லட்சம் செலவில் 50 இடங்களில் வைஃபை மண்டலங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை , கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், சேலம் மத்திய பேருந்து நிலையம், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் மற்றும் கோவை மத்திய பேருந்து நிலையம் என ஐந்து இடங்களில் இந்த இலவச அம்மா ‘வை ஃப்பை’ சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவங்கி வைத்தார். 
 
அம்மா வை ஃபை மண்டலங்களில் ஒருவருக்கு நாளொன்றுக்கு 20 நிமிடங்கள் வரை இணைய சேவை வசதி இலவசமாக வழங்கப்படும். அதன்பிறகு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.