ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 மார்ச் 2018 (14:10 IST)

ரோட்டோர டீக்கடையில் காசு கொடுத்து டீ குடித்த முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கனாபுரம் ஊராட்சி ஒன்றியம் சமுத்திரம் என்ற கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சேலம் திரும்பும் வழியில் அந்த கிராமத்தில் உள்ள டீக்கடை ஒன்றின் அருகே திடீரென காரை நிறுத்த சொன்னார் முதல்வர். அந்த டீக்கடையின் பெஞ்சில் உட்கார்ந்து முதல்வர் எடப்பாடி டீ குடித்தார்.

பின்னர் அந்த கடை உரிமையாளரிடம் தேனீர் வியாபாரம் எப்படி உள்ளது என்று விசாரித்துவிட்டு பின்னர் தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் கொடுத்த டீக்கு பணம் கொடுத்தார். மேலும் தேனீர் நன்றாக இருந்ததாக கூறி கடை உரிமையாளருக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்.எம்.ஏக்கள், எம்பிக்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.