1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (14:31 IST)

அமைச்சர் அமித்ஷா வருகை எதிரொலி: ட்ரோன்கள் பறக்க தடை..!

Amitshah
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வர இருக்கும் நிலையில் வேலூரில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை என காவல்துறையை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
மத்திய அமைச்சர் அமைச்சர் அமித்ஷா நாளை வேலூர் பள்ளிகொண்டா கந்தனேரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வேலூர், பள்ளிகொண்டா கந்தேரி ஆகிய பகுதிகளில் நாளை ஒரு நாள் மட்டும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த உத்தரவை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 
 
இந்த நிலையில் நாளை தமிழக வரும் அமித்ஷா, ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரையும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran