1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (11:16 IST)

சென்னை வருகிறார் அமித்ஷா.. ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல்..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வர இருக்கும் நிலையில் அவரை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மத்திய அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாகவும், அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் ஓ பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்கு அமித்ஷா இன்னும் நேரம் கொடுக்கவில்லை என்றும் ஆனால் அவர் நேரம் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறும் என்று கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உடன் அமித்ஷா சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran