புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (19:18 IST)

ஆபரேஷன் தமிழ்நாடு: அமித்ஷாவின் அடுத்த அதிரடி திட்டத்தால் தமிழிசை பதவி காலி!

இந்தியாவிலேயே பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய அவமானம் தமிழகத்தில் தான் கிடைத்துள்ளது. வலிமையான கூட்டணி இருந்தும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தும் மோடி உள்பட தேசிய தலைவர்கள் பிரச்சாரம் செய்தும் வெற்றியாளர்களை பாஜக வேட்பாளர்களால் நெருங்ககூட முடியாதது அமித்ஷாவை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளதாம்
 
இதற்கான காரணங்களை அவர் ஆராய்ந்தபோது தமிழக பாஜக தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சு, மக்களை கவரும் வலிமை இல்லாதது ஆகியவை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசையை நீக்க அமித்ஷா முடிவெடுத்துள்ளதாகவும் அவருக்கு பதில் நிர்மலா சீதாராமனை தமிழக பாஜக தலைவராக்கவும் திட்டமிட்டுள்ளாராம்
 
ஆபரேஷன் தமிழ்நாடு என்ற பெயர் கொண்ட இந்த திட்டத்தின்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாஜக செல்வாக்கை வளர்ப்பது என்றும் தமிழகத்திற்கு தேவையான திட்டத்தை தாராளமாக செய்து முடிப்பது என்றும் கொள்கை அளவில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். 
 
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து 8 வழிச்சாலை உள்பட ஒருசில திட்டங்களை நிறுத்தி வைத்தும், எய்ம்ஸ் மருத்துவமனை, கோதாவரி நீரை தமிழகத்திற்கு கொண்டு வருவது போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாம். இந்த ஆபரேஷன் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்