1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 நவம்பர் 2019 (21:47 IST)

இந்தியா இந்தியர்களுக்கு மட்டுமே! சீமானுக்கு அமித்ஷா கொடுக்கும் பதிலடி!

தமிழ்நாடு தமிழருக்கே என்றும், தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும் என்றும் அடிக்கடி சொல்லி வருபவர் சீமான் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா இந்தியர்களுக்கே என்ற ஒரு திட்டத்தை அமித்ஷா கையிலெடுத்து உள்ளதாகவும் இதனால் சீமானின் ஆதரவாளர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது 
 
அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் தங்கி இருப்பவர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவி இந்தியாவில் வசிக்கும் அவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இதே போல் தமிழகத்திலும் இலங்கை உள்பட ஒருசில வெளிநாட்டினர் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் ஊடுருவி தங்கியிருப்பதாகவும் அவர்களை வெளியேற்ற தமிழகத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்படும் அமித்ஷா அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இலங்கையில் இருந்து மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலிருந்தும் கோவை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகவும் அவர்களை வெளியேற்றும் வகையில் இந்த கணக்கெடுப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
2021 ஆம் ஆண்டு எடுக்கப்படவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஒவ்வொரு இந்திய குடிமகனும் தாங்கள் 30 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களைக் காட்டவேண்டும் என்றும், அவ்வாறு காட்ட முடியாதவர்கள் வெளிநாட்டவர்களாக கருதப்பட்டு வெளியேற்றப் படுவார்கள் என்றும் கூறப்படுகிறது 
 
இதனால் சீமான் உள்ளிட்ட பிரினவாதிகளின் ஆதரவாக இருக்கும் பலர் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது