திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (11:35 IST)

தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரனும் ; நம்ம கொடி பறக்கனும் : அமித்ஷா உத்தரவு

தமிழகத்தில் பாஜக ஆட்சியை மலர வைக்க தீவிரமாக செயல்பட வேண்டும் பாஜக நிர்வாகிகளிடம் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

 
தமிழகத்தில் பாஜக வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்தும், மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கவும் அமித்ஷா நேற்று சென்னைக்கு வந்தார்.
 
விமான நிலையத்திலிருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது தமிழகத்தில் பாஜகவிற்கு மக்களிடம் உள்ள எதிர்ப்பை பல நிர்வாகிகள் விளக்கியதாக தெரிகிறது. 
 
அதையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்ட அமித்ஷா “உங்கள் அனைத்து பிரச்சனைகளையும் நான் சரி செய்கிறேன். உங்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுக்கப்படும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் நம் கொடி பறக்க வேண்டும். பாஜகவின் திட்டங்களை கிராமம் கிராமமாக மக்களிடம் சென்று எடுத்து சொல்லுங்கள். மக்கள் பிரச்சனையை பேசும் கட்சிதான் பாஜக என அவர்களின் மனதில் பதிய வையுங்கள். ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக மக்களை தயார் படுத்தி அதை பாஜகவிற்கு சாதகமாக மாற்ற வேண்டும்” என பல பேசினார் என செய்திகள் வெளிவந்துள்ளது.