வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (18:55 IST)

2 ஆண்டு முதுகலை சட்டப்படிப்பு.. விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்.. பல்கலை நிர்வாகம் அறிவிப்பு..!

2 ஆண்டு முதுகலை சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று மாலை வரை கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கியு  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
2 மற்றும் 3 ஆண்டுகள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி 2 ஆண்டு முதுகலை சட்ட படிப்புக்கு ஆகஸ்ட் 5 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் 3 ஆண்டு எல்.எல்.பி.சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஆகஸ்ட் 10 நீட்டிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் கோரிக்கையை அடுத்து இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு மேல் கால அவகாசம் நீடிக்க வாய்ப்பு இல்லை என்பதால் இந்த குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சட்டப்படிப்பில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கால அவகாசம் முடிவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் தகுந்த ஆவணங்களை பதிவேற்றி குறிப்பிட்ட காலத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
 
Edited by Mahendran