ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2024 (08:31 IST)

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு எப்போது? மருத்துவக் கலந்தாய்வு குழு அறிவிப்பு..!

கோப்புப் படம்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பை மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் மூன்றாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 26 முதல் தொடங்கும் என்றும் மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும்,  அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ கலந்தாய்வு குழுவின் முழு விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் இந்த கலந்தாய்வு குறித்த தகவல்களை இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு செல்லும் மாணவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Edited by Siva