ஞாயிறு, 8 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 ஜனவரி 2026 (13:15 IST)

பணப்பெட்டியை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்.. மொத்தம் ரூ. 45 லட்சமா?

பணப்பெட்டியை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்.. மொத்தம் ரூ. 45 லட்சமா?
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இறுதி வாரத்தை நெருங்கியுள்ள நிலையில், ரசிகர்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளரான கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.  
 
ஜனவரி 18-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், வெற்றியாளராக வாய்ப்பு இருந்தும் வினோத் 18 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்துடன் வெளியேற முடிவெடுத்தது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தனது தினசரி சம்பளம் மற்றும் இந்த பணப்பெட்டித் தொகை என மொத்தம் சுமார் 45 லட்ச ரூபாயுடன் அவர் வெளியேறியிருப்பது ஒரு புத்திசாலித்தனமான முடிவு என ஒரு தரப்பினர் பாராட்டுகின்றனர். இருப்பினும், கவின் மற்றும் ஓவியா போன்ற விருப்பமான போட்டியாளர்கள் பாதியிலேயே வெளியேறியது போல வினோத்தும் வெளியேறியது அவரது தீவிர ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 
 
வினோத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, தற்போது ஆரோரா சின்க்லேர், சபரிநாதன், திவ்யா கணேஷ், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் சாண்ட்ரா ஆகிய ஐந்து பேர் மட்டுமே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். வரும் வார இறுதியில் சீசன் 9-ன் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.
 
Edited by Mahendran