ஆலங்கட்டியுடன் கோடை மழை.. 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் அடித்த வேலூரில் திடீர் குளிர்ச்சி..!
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று 100 டிகிரி பாரன் ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மதிய நேரத்தில் சாலைகளில் ஆள் நடமாட்டமே குறைந்துள்ளது என்றும் வாகனங்களும் குறைவாகவே இயங்கியதாகவும் கூறப்படுகிறது. நாளை மறுநாள் அக்னி நட்சத்திர வெயில் தொடங்க இருக்கும் நிலையில் பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எப்போதுமே வெயில் அதிகமாக இருக்கும் வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவான நிலையில் திடீரென வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் ஆலங்கட்டியுடன் கூடிய கோடை மழை பெய்தது பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பேரணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Edited by Mahendran