புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2023 (16:19 IST)

மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது: சென்னை மெட்ரோ நிர்வாகம்

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் இடம் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில்கள் சென்னை மக்களுக்கு வரப்பிரசாதம் என்பதும் இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் உள்ளன என்பது தெரிந்ததே.
 
அந்த வகையில் கிட்டத்தட்ட அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள் இருப்பதால் பயணிகளுக்கு மிகுந்த வசதியாக உள்ளது.
 
இந்த நிலையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் சீரமைப்பு பணிக்காக மார்ச் 24 ஆம் தேதி முதல் மூடப்படுவதாகவும் இந்த வாகன நிறுத்துமிடம் அடுத்த மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது என்றும் சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
Edited by Siva