தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்! – சென்னையில் 200 இடங்களில்..!
இந்தியா முழுவதும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.
கடந்த சில காலமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இன்புளூயன்சா எச்3என்2 வகை வைரஸ் தொற்றால் பலரும் வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். பல பகுதிகளில் அதிகமான குழந்தைகள் இந்த காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய சுகாதார அமைச்சகம் வைரஸ் காய்ச்சல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களும் வைரஸ் காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகளும் வழங்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 200 சிறப்பு காய்ச்சல் முகாம் இன்று நடைபெறுகின்றன. பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று பரிசோதனை மற்றும் காய்ச்சல் குறித்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Edit by Prasanth.K