வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (14:50 IST)

பத்து தல படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது. இப்போது சில பல மாற்றங்களோடு ‘பத்து தல’ என்ற பெயரோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியீடு வரும் மார்ச் 18 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கான பின்னணி இசைப் பணிகளை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான ஒரு பாடல் பாராட்டுகளைப் பெற்றது. அதுபோலவே டீசரில் ரஹ்மானின் பின்னணி இசையும் வெகுவாக சிலாகிக்கப்பட்டது.