1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (16:44 IST)

நீங்க திருந்தவே மாட்டீங்களா? அழகிரி மகன் போட்ட டுவீட்; கடும் கோபத்தில் திமுக

அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தொடர்ச்சியாக தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை சந்தித்து வருவது குறித்து அழகிரி மகன் தயாநிதி அழகிரி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
 
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துவிட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேமுதிகவுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
 
ஏற்கனவே நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று காலை நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தை சந்தித்தார். சற்று நேரத்திற்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்து பேசினார். விஜயகாந்தை சந்தித்த பின் இவர்கள் அனைவரும் கூறியது, இது அரசியல் சந்திப்பல்ல. கேப்டனின் உடல்நலம் பற்றி விசாரிக்கவே வந்தோம் என்பது தான்.
 
இந்நிலையில் அழகிரியின் மகன், உதயநிதி அழகிரி தனது டிவிட்டர் பக்கத்தில் இத்தன நாளா கேப்டனுக்கு  உடம்பு சரியில்லன்னு தெரியாதா? நீங்க திருந்தவே மாட்டீங்க என கூறியுள்ளார். இது யாரை கோவப்பட்டுத்தியதோ இல்லையோ திமுகவினரை செம கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாம்.