1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (13:36 IST)

சின்ன பையன் உதயநிதிக்கு பதவியா? படையை திரட்டும் அழகிரி??

உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் பதவி வழங்கப்படும் என செய்திகள் வெளிவரும் நிலையில், அழகிரி தனது ஆதரவாளர்கள் படையை திரட்ட உள்ளாராம். 

 
கருணாநிதி தனது அரசியல் காலக்கட்டத்தின் போதே தனது அடுத்த அரசியல் வாரிசாக முக ஸ்டாலினை முன்னிலைப்படுத்தினார். இதனால் கடுப்பான அழகிரி பிரச்சனை செய்ததால் கருணாநிதியே அழகிரியை கட்சியைவிட்டு நீக்கினார். 
 
அழகிரியை நீக்கிய போது மிகவும் சாதூர்யமாக அவரது பெரும்பாலான ஆதரவாளர்களை திமுக பக்கம் வரவழைத்துக் கொண்டார். இதன் பின்னர் எந்த பிரச்சனையுமின்றி ஸ்டாலின் தனது ஆதிக்கத்தை திமுகவில் துவங்கினார். தன்னை அடுத்த தலைவராகவும் தொண்டர்கள் ஏற்கும்படி நிலைப்படுதிக்கொண்டார். 
கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரி திமுகவில் விருப்பம் தெரிவித்த போதும் ஸ்டாலின் எதை ஏற்க மறுத்துவிட்டார். சமீபத்தில் தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இணைத்த போது அழகிரி ஆதரவாளர்கள் எதிர்க்கட்சியினர் கட்சியில் சேர்க்கும் போது அழகிரி சேர்க்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.
 
ஆனால் இம்மாதிரியான கேள்வியை காதில் போட்டுக்கொள்ளாத ஸ்டாலின் இப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சிக்குள் ஒரு பதவி வழங்கி தனது அரசியல் வாரிசை உருவாக்க காய் நகர்த்தி வருகிறார் போலும். 
இதனால், கடும் அழகிரி கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. பெரிதாக அரசியல் அனுபவம் இல்லாத உதயநிதிக்கு திமுகவில் பதவி ஆனால் ஒரு காலத்தில் தெற்கை கையில் வைத்திருந்த எனக்கு இப்போது மதிபில்லாமல் போய்விட்டது என வருந்தினாராம். 
 
மேலும், திமுகவில் உள்ள தனது ஒருசில ஆதரவாளர்களையும், கட்சிக்குள் அதிருப்தியில் உள்ள ஆட்களையும் தன் பக்கம் இழுக்க திட்டமிட்டு வருகிறாராம். இது எந்த அளவிற்கு வெற்றியை கொடுக்கும் என்பது யூகிக்க முடியாத கேள்வியாகவே நம் முன் நிற்கிறது.