வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (15:26 IST)

புலி வருதுனு சொன்னாங்க ... சிங்கமே வந்துருச்சு - ரஜினியின் அரசியல் வருகை குறித்து லிங்குசாமி டுவீட்

கடந்த சில நாட்களாகவே நடிகர் ரஜினி  தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வந்த நிலையில் இன்று தனது அரசியல் முடிவை அறிவித்ததுடன், வரும் ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில்,  ரஜினியின் ரசிகர்களுக்கு அவரது முடிவு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போ இல்லீனா இனி எப்பவும் இல்லை என்று ரஜினியின் ரசிகர்களின் நீண்டகாலக் குரல் இன்று பலித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினியின் ரசிகரும் அவரது பயோபிக் படத்தை இயக்கவுள்ளதாகக் கூறிய  இயக்குநர் லிங்குசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்,

புலி‌ வருது .. புலி வருதுனு சொன்னாங்க ..
ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு.
வாழ்த்துக்கள் சார்.