1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2023 (20:30 IST)

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட சூப்பர் ஸ்டார், விஷ்ணு விஷாலை சந்தித்த அஜித்

ajith, ameer khan,vishnu
காரப்பாக்கத்தில் வெள்ளத்தில் சூழ்ந்த வீட்டில் இருந்த சூப்பர் ஸ்டார் அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் மீட்கப்பட்ட நிலையில் அவர்களை சந்தித்து  நலம் விசாரித்தார் அஜித்குமார்.
 
மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வரலாறு காணாத மழையினால் இங்கு சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் நாடு அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் செய்து வருகின்றது.

இந்த நிலையில், தான் வெள்ளத்தில் சிக்கியுள்ளாதாக நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டிருந்த நிலையில், அவர் அருகே இருந்த அமீர்கானும் மீட்கப்பட்டார்.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமார், காரப்பாக்கத்தில் வெள்ளத்தில் சூழ்ந்த வீட்டில் இருந்த சூப்பர் ஸ்டார் அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷாலை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்ட செய்தியை  வீரர்கள்  அறிந்து இருவரையும் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் அஜித்குமார்.

இவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.