செவ்வாய், 25 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (07:47 IST)

சின்னத்திரை நடிகர் பப்லு பிருத்விராஜின் காதல் பிரிந்ததா? சோகத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் 90 களின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பப்லு, இவர், அஜித்துடன் இணைந்து அவள் வருவாளா, கார்த்தியுடன்  பொன்னுமணி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் ஆவார். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான வானமே எல்லை திரைப்படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார்.

சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்தபோது, சின்னத்திரையில், பல தொடர்களிலும், சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தார். இவர் நடித்து வந்த கண்ணான கண்ணே சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

57 வயதாகும் இவர் தன்னை  விட 30 வயது குறைந்த மலேசிய பெண்ணான ஷீத்தல் என்பவரோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் பெருமளவில் உருவாகி வந்தனர். பிருத்விராஜ் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்தவர்.

இந்நிலையில் இப்போது பிருத்விராஜ் ஷீத்தல் இடையிலான காதல் பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஷீத்தல் ஆமாம் என்பது போல பதிலளித்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல் இருவரையும் பின்தொடர்ந்து வந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.