1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஜனவரி 2024 (14:37 IST)

பொங்கல் பண்டிகை எதிரொலி! விமான கட்டணம் பல மடங்கு உயர்வு.!! பயணிகள் அதிர்ச்சி.!!

flight
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாடுவதற்காக  சென்னையில் தங்கி வசிப்போர், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். கடைசி நேரத்தில் ரயில்கள், பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் தற்போது விமானங்களை நாடத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னையிலிருந்து மதுரை, கோவை, தூத்துக்குடி, சேலம் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 
இந்த நகரங்களுக்கான விமான கட்டணங்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.3,624 வசூலிக்கப்படும் நிலையில், ரூ.13,639 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
 
மதுரைக்கான கட்டணம் ரூ.3,367 ரூபாயிலிருந்து ரூ.17,262 ஆக அதிகரித்துள்ளது. திருச்சிக்கு வழக்கமாக ரூ.2,264 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.11,369 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
கோவைக்கான கட்டணம் ரூ.3,315-இல் இருந்து ரூ.14,689 ஆகவும் சேலத்துக்கு ரூ.2,290 இல் இருந்து ரூ.11,329 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் வேறு வழியின்றி கட்டணங்களை பொருப்படுத்தாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்கின்றனர்.