1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (16:01 IST)

ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயங்கும்!

2024 ஆம் ஆண்டு ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளதாவது:
 
''பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 (திங்கட்கிழமை), 16 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
 
1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
 
2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
 
3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
 
4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
 
மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''என்று தெரிவித்துள்ளார்.