காற்று மாசு அபாயம் தமிழகத்திற்கு இல்லை..

Arun Prasath| Last Modified திங்கள், 4 நவம்பர் 2019 (12:36 IST)
காற்று மாசால் தமிழகத்திற்கு எந்த அபாயமும் இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசு வரலாறு காணாத அளவு அதிகரித்து வருகிறது. காற்று மாசு கட்டுபடுத்த டெல்லி அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதிகரித்துவரும் காற்று மாசால், டெல்லி மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் சாலையில் செல்வோர்கள் முகத்தை துணிகளால் மூடிக்கொண்டே செல்கின்றனர்.

காற்று மாசால் டெல்லி பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து டெல்லியை போல தமிழ்நாட்டிலும் காற்று மாசு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் என்ற தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார். இந்நிலையில் பிரதீப் ஜான் தெரிவித்துள்ள செய்தியை மறுத்துள்ளது இந்திய வானிலை மையம்.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் பாலச்சந்திரன், டெல்லி தமிழ்நாட்டிலிருந்து மிக தூரத்தில் உள்ளதாலும், இரு ஊர்களுக்கும் இடையே மலைப்பகுதிகள் உள்ளதாலும், கிழக்கு மற்றும் வட கிழக்கிலிருந்து தமிழ்நாட்டிற்கு காற்று வீசுவதால் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாற்றால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதியளித்துள்ளார். ஆதலால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :