வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 1 ஜூன் 2024 (22:33 IST)

தேர்தலில் அதிமுக வாஷ் அவுட்..! இரட்டை இலக்கில் பாஜக..! ஷாக் எக்சிட் போல் முடிவு..!!

Admk BJP
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் முதல்முறையாக  பாஜக இரட்டை இலக்கில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக டுடே சாணக்யா செய்தி நிறுவனம் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலை, பல்வேறு செய்தி நிறுவனங்களும் வரிசையாக எக்ஸிட் போல் Depending வெளியிட்டு வருகின்றன. அதன்படி  டுடே சாணக்யா என்ற நிறுவனம் தமிழ்நாட்டில் நடத்திய எக்சிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி இந்த முறை 29 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.  பாஜகவின் என்டிஏ கூட்டணி இரட்டை இலக்கில் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் மட்டும் பாஜக 10 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

 
அதேசமயம் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என டுடே சாணக்யா தனது எக்ஸிட் போல் முடிவுகளில் கூறியுள்ளது.