திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 அக்டோபர் 2025 (13:10 IST)

சட்டப்பேரவையில் தர்ணா போராட்டம் செய்த எடப்பாடி பழனிசாமி.. அமைச்சர் சிவசங்கருக்கு எதிர்ப்பு..!

சட்டப்பேரவையில் தர்ணா போராட்டம் செய்த எடப்பாடி பழனிசாமி.. அமைச்சர் சிவசங்கருக்கு எதிர்ப்பு..!
தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அமைச்சர் சிவசங்கர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவைக்குள்ளேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
 
இந்த விவாதத்தின் போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா? இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.
 
இருக்கையில் அமர்ந்து விவாதிக்க அவை முன்னவர் வலியுறுத்திய போதிலும், அமளி தொடர்ந்தது. இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சொல்லி பேரவை தலைவர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அதிமுகவினர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதன்பின் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் தர்ணா போராட்டம் செய்தனர்.
 
 
Edited by Mahendran