திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 1 ஜூலை 2018 (11:12 IST)

அதிமுக - திமுக மறைமுகக் கூட்டணி? கொளுத்திப்போடும் பொன்னார்

மக்கள் பிரச்சனை பற்றி சட்டசபையில் பேசாமல் வெளிநடப்பு மட்டுமே செய்யும் ஸ்டாலின் அதிமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளாரோ என சந்தேகம் எனக்கு இருக்கிறது என பொன்னார் தெரிவித்துள்ளார்.
நாகர் கோவிலில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், நான் தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகள் தான் காரனம் என முதலில் இருந்தே தெரிவித்து வருகிறேன் ஆனால் இதனை யாருமே நம்பவில்லை.
 
ஆனால் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் அந்த பகுதி மக்கள் அளித்த வாக்குமூலத்தில் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் பெயரை கூறி, அந்த இயக்கத்தினர் தான் மீனவ இளைஞர்களை மூளைச்சலவை செய்ததாகவும், வன்முறைக்கு காரணமே அந்த இயக்கத்தினர்கள் தான் என்றும் கூறியுள்ளனர்.
 
இதனைக்குறிப்பிட்டு பேசிய பொன்னார் உண்மை இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த சமூக விரோதிகளை வேரோடு அளிக்க வேண்டும்.
 
மேலும் தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு திமுகவும் காரணம். ஏனென்றால் சட்டசபையில் ஆளுங்கட்சியை கேள்வி கேட்காமல் வெளிநடப்பு செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர். ஏன் இன்னும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என திமுக இதுவரை கேள்வி எழுப்பவில்லை.
இதனால் ஸ்டாலின் அதிமுகவுடம் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளாரோ என சந்தேகம் எழுகிறது. இனியாவது வெளிநடப்பு செய்யாமல் மக்களின் பிரச்சனையை சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என அவர் கூறினார்.