திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 3 ஏப்ரல் 2021 (22:37 IST)

அதிமுகவில் இணைந்த அமமுக வேட்பாளர்...

தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இன்று அமமுக வேட்பாளர் ஒருவர்  அதிமுகவில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்த ஓட்டுகள் மே 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது.

எனவே  அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் கவர்ந்தனர். இந்தப் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் கொல்லிமலை சந்திரன் இன்று திடீரென்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் கொல்லிமலை சந்திரன் அதிமுகவில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதனால் அமமுக வேட்பாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.