திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 3 ஏப்ரல் 2021 (17:17 IST)

ஓபிஎஸ் மகனிடம் திமுகவுக்கு வாக்குச் சேகரிப்பு !அதிர்ச்சியில் அதிமுக

ஓபிஎஸ் மகனிடம் திமுகவுக்கு வாக்குச் சேகரிப்பு !அதிர்ச்சியில் அதிமுக
தேனி மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். எனவே அவருக்கு ஆதரவாக அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் பொதுமக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் போடி வஞ்சி ஓடை அருகில்,  பாண்டிய மறவர் சங்கத்திற்கு நேற்று காலை ஓபிஎஸ்-ன் இளையமகன் ஜெயபிரதீப் வாக்கு சேகரிக்கச் சென்றார்.

அப்போது அவர் 3வது முறையாக அப்பாவை  எம்.எல்.ஏ ஆக்க அதிமுகவுக்கு ஓட்டுப்போடுங்கள் எனக் கூறினார். பின்னர் சங்கத்தலைவர் காமராஜ்,ஜெயபிரதீப்பிடம் திமுகவுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.