1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Stock Market Dips Slightly After Consecutive Gains

தொடர் ஏற்றத்திற்கு சற்றே சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

பங்குச்சந்தை
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்ததால், முதலீட்டாளர்கள் நல்ல லாபம் பெற்றனர் என்பதும், கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்டி வந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், தொடர் ஏற்றத்துக்கு பிறகு இன்று பங்குச் சந்தை சற்று சரிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியதும் முதலே லேசான சரிவுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

சற்றுமுன், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 160 புள்ளிகள் சரிந்து 79,942 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 45 புள்ளிகள் குறைந்து 24292 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

மேலும், இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், இண்டஸ் இண்ட் வங்கி, ஐடிசி, மாருதி, நெஸ்ட்லே இந்தியா, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல், டி.சி.எஸ்., கோடக் மகேந்திரா வங்கி, இன்போசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எச்.டி.எஃப்சி வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சோனியாவின் குடும்பம் முஸ்லிம்களையே பார்க்கிறது: ராபர்ட் வதேரா பேச்சுக்கு பாஜக கண்டனம்..!